லண்டன் ட்ராம் விபத்தில் 7 பேர் பலி; டஜன் கணக்கானோர் காயம் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் ட்ராம் விபத்தில் 7 பேர் பலி; டஜன் கணக்கானோர் காயம் (காணொளி)

  • 10 நவம்பர் 2016

லண்டனில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ராம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும், டஜன்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

குரோய்டோன் பகுதியில் இந்த ட்ராம் தடம் புரண்டதை தொடர்ந்து, அதற்குள் பலர் சிக்கிக் கொண்டார்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

42 வயதான பெக்ஹென்ஹாம் என்ற பகுதியை சேர்ந்த ட்ராம் ஓட்டுநர், திட்டமிடாத படுகொலை செய்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஓட்டுநர் தூங்கிவிட்டாரா என்பதை பிரிட்டிஷ் போக்குவரத்து போலிசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த ட்ராம் வண்டி அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட குறிப்பிடத்தக்க அளவில் அதிக வேகத்தில் பயணித்ததாக ரயில் விபத்துக்களை விசாரிக்கும் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்