தெருவில் இறங்கிய ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தெருவில் இறங்கிய ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள்

அமெரிக்க அதிபராக தேர்வான மறுநாள் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகார கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இறங்கிவிட்டார்.

தன் ஆட்சிக்கான நியமனங்கள் குறித்து ஆலோசகர்களிடம் விவாதித்தார்.

தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளைமாளிகையில் சந்தித்து சுமுகமான அதிகார மாற்றம் குறித்து பேசவிருக்கிறார்.

ஆனால் அமெரிக்க நகரங்கள் பலவற்றில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ட்ரம்புக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

அவர் தமது கருத்துக்களின் பிரதிநிதியல்ல என்று ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.