அரபு வசந்தத்தால் மத்திய கிழக்கு நாடுகள் பாதிப்பு - ஐநா ஆய்வு

அரபு வசந்தமும், அதனுடைய விளைவுகளும் அந்த பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியில் 600 பில்லியன் டாலருக்கு மேலான நஷ்டத்தை விளைவித்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐக்கிய நாடுகள் அவையின் மேற்கு ஆசியாவுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம்

2011 ஆம் ஆண்டு 'அரபு வசந்தம்' என்று கூறப்பட்ட எழுச்சி ஏற்படுவதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இருந்த வளர்ச்சி கண்ணோட்டத்தை அடிப்படையாக வைத்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்கு ஆசியாவுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த பிராந்திய நாடுகளின் தேசிய ஒட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்துக்கு இந்த இழப்பு சமம் என்று ஐநாவின் இந்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

போர்களும், பாதுகாப்பின்மையும், சுற்றுலா துறையால் கிடைக்கின்ற வரவை பாதித்து, வெளிநாட்டு முதலீட்டையும் தடுத்து, கடன், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் போன்ற பொருளாதார பிரச்சனைகளை மோசமாக்கியுள்ளதாக இது கூறுகிறது.