மேற்கு கரையில் நடந்த இஸ்ரேல் தேசிய நாடக நிகழ்ச்சியால் சர்ச்சை

மேற்கு கரையில் அமைந்துள்ள கிரீயாத் ஆர்பா குடியிருப்பில் முதல்முறையாக இஸ்ரேல் தேசிய நாடக அமைப்பு நிகழ்ச்சி நடத்தியிருப்பது, இஸ்ரேலின் கலைஞர்கள் சமூகத்தில் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கிரீயாத் ஆர்பா குடியிருப்பில் நிகழ்ச்சிகளை நடத்த மறுக்கும் கலைக்குழுக்களுக்கு நிதி ஆதரவை நிறுத்த போவதாக இஸ்ரேலின் கலாசார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் எச்சரிக்கை

ஹெப்ரோனுக்கு அருகில் சர்வதேச சட்டத்தால் பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்ற யூத குடியிருப்பில் நடத்தப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை நடிகர்களில் ஒருவரான ஸ்க்லோமி பெர்டோநோவ் பங்கேற்க மறுத்து விட்ட நிலையில் நடைபெற்றிருக்கிறது.

"எ சிம்பிள் ஸ்டோரி" என்ற சாமுவேல் யுசேஃப் அக்னோனுடைய புதினத்தை தழுவிய இந்த நாடகத்தை இஸ்ரேலின் கலாசார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மிர்ரி ரெகெவ் பார்த்து ரசித்திருக்கிறார்.

இந்த குடியிருப்பில் நிகழ்ச்சிகளை நடத்த மறுக்கும் கலைக்குழுக்களுக்கு நிதி ஆதரவை நிறுத்த போவதாக அவர் எச்சரித்திருக்கிறார்.

பிரேக்கிங் த சைலன்ஸ் என்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த குடியிருப்பில் நடிகர்கள் பங்கேற்பதை தடுக்க முயன்றுள்ளதாக ரெகெவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்