துருக்கியில் ஆளும் அரசை விமர்சித்த முன்னணி பத்திரிகையின் தலைவர் கைது

துருக்கியில் முன்னணி எதிர் தரப்பு பத்திரிகையின் இயக்குநர்கள் குழுவின் தலைவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஜெர்மனியிலிருந்து வந்த அகின் அட்டாலே இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அரசு பங்களிப்புடன் இயங்கும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கி அதிபர் ரஜீப் தாயிப் எர்துவானையும் மற்றும் அவரது இஸ்லாமியவாத ஏ.கே கட்சியையும் அகின் அட்டாலேவின் செய்தித்தாளான கும்ஹுரியத் விமர்சித்து வந்தது.

கடந்த வாரம், அந்த செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் உட்பட 9 செய்தியாளர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அந்த செய்தித்தாளின் முன்னாள் தலைமை ஆசிரியர் வெளிநாட்டில் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்.

தீவிரவாத நடவடிக்கைகள் என்றழைக்கப்படும் செயல்களின் தொடர்பில் இன்றைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது

தொடர்புடைய தலைப்புகள்