மொசூல் நகரில் ஐ.எஸ் குழுவினர் அட்டூழியம்: புதிய ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா தகவல்

மொசூல் நகரை இராக் சிறப்பு படையினர் நெருங்கி வரும் நிலையில், மொசூல் நகருக்குள்ளும், அதனை சுற்றியும் ஐ.எஸ் குழுவினர் பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்ததற்கான புதிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை BULENT KILIC
Image caption மொசூல் நகரில் ஐ.எஸ் குழுவினர் அட்டூழியம்: புதிய ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா தகவல்

தேசத்துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் பலரை ஐ.எஸ் குழுவினர் கொன்றதாக அந்த பகுதியில் இருந்து தமக்கு இருக்கும் தொடர்புகளில் இருந்து வந்த தகவலை ஜெனிவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் சுட்டிக்காட்டி உள்ளது.

மொசூலின் பல பகுதிகளில் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் தொடங்கவிடப்பட்டுள்ளன.

மேலும் அவர்கள், கைப்பேசியை பயன்படுத்தி அதன் மூலம் இராக் பாதுகாப்பு படையினர்களுக்கு தகவல்களை கசியவிட்டார்கள் என்று , அந்த சடலங்களில் எழுதப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதல்தாரிகளாக சிறுவர்களை ஐ.எஸ் குழு அனுப்பியிருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும், மொசூல் நகருக்குள் இந்த பயங்கரவாத குழுவானது, ரசாயன ஆயுதங்களாகப் பயன்படுத்த சல்பர் மற்றும் அமோனியாவை சேகரித்து வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்