சீனாவில் ஒரு முன்னாள் தலைமை வழக்கறிஞர் மீது 1,500க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு

சீன சூதாட்ட பிரதேசமான மக்காவ்வின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஒருவர் மீது 1,500க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மக்காவ்வில் உள்ள சூதாட்ட விடுதி

அதிகார துஷ்பிரயோகம், பண மோசடி மற்றும் குற்றவாளிகள் குழு ஒன்றை உருவாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் ஹோ சோய்-மெங் மீது பதியப்பட்டுள்ளன.

அந்த வழக்கறிஞரின் உறவினர்கள் மற்றும் சக கூட்டாளிகள் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சீனாவில் உள்ள இந்த முன்னாள் போர்த்துகீசிய காலனியானது உலகிலே மிகப்பெரிய சூதாட்ட மையமாக கருதப்படுகிறது.

மக்காவ்வின் தலைவராக அவர் வரக்கூடும் என்று கணிப்புகள் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உள்ள இந்த முன்னாள் போர்த்துகீசிய காலனியானது உலகிலே மிகப்பெரிய சூதாட்ட மையமாக கருதப்படுகிறது. அது ஒரு குற்றச்செயல்கள் நடக்கும் இடமாகவும் பெயர் பெற்றிருக்கிறது.