சீனாவில், கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் ஒரு வாரத்திற்கு பிறகு மீட்பு

சீனாவில், கடந்த ஞாயிறு அன்று பராமரிப்பில்லாத ஒரு கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவனின் உடலை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை THE PAPER
Image caption ஹெப்பே மாகாணத்தில் மீட்பு பணிகள் நடந்த இடம்

ஹெப்பே மாகாணத்தில், தனது தந்தைக்கு காய்கறிகளை அறுவடை செய்ய உதவி செய்து கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தடுப்பில் இருந்து உள்ளே விழுந்தான்.

இந்தச் சிறுவனை மீட்க 500க்கும் மேற்பட்டோர் பல மணி நேரம் உழைத்தனர்.

அந்தக் கிணறு வெறும் 30 சென்டிமீட்டர் அகலம் கொண்டதாகவும், மிகவும் குறுகலாகவும், வளர்ந்தவர்கள் நுழைய முடியாதவாறும் இருந்ததது.

சிறுவனை மீட்க, மீட்புப்பணியாளர்கள் செய்த பெரும் முயற்சியில் டன் கணக்கில் மண்ணைத் தோண்ட வேண்டியிருந்தது.

சிறுவனை உயிரோடு வைத்திருக்க, அவர்கள் ஆக்சிஜன் செலுத்தினர்.

ஆனால், இந்த வாரத்தின் தொடக்கத்தில், சிறுவனிடம் இருந்து அவர்கள் எந்தத் தகவல் தொடர்பையும் பெற முடியவில்லை.