தெற்கு சூடானில், பாதுகாப்பு அதிகாரிகளால் சுயாதீன வானொலி நிலையம் மூடல்
தெற்கு சூடானில் ஒரு சுயாதீன வானொலி நிலையம் பாதுகாப்பு அதிகாரிகளால்மூடப்பட்டுள்ளது .
பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்டுடியோக்களை பூட்டினர் மற்றும் ஒலிபரப்பு டிரான்ஸ்மிட்டரை நிறுத்தினர் என்று ஐ ரேடியோ என்ற அந்த வானொலி சேவையின் மூத்த பத்திரிகையாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
எந்த வித அதிகாரபூர்வ காரணமும் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஐ மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, தேசிய பாதுகாப்பு சேவை பொது இயக்குநருடன் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
தெற்கு சூடானில் ஒரு சுயாதீன ஊடகம் செயல்படுவது மிக கடினமாகி உள்ளது என்று ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.