அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புக்கு எதிராக மூன்றாவது நாளும் தொடரும் போராட்டங்கள்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு எதிராக மூன்றாவது நாள் இரவிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிக்காகோவில் இன்னும் அதிக போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஓரேகானிலுள்ள போட்லாண்டில், மூன்று தனிப்பட்ட பேரணிகளுக்கு பின்னர் புறநகரில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டகாரர்களை கலைக்க காவல்துறையினர் பெரும் வெளிச்சம் கொண்ட கையெறி குண்டுகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

டென்னெஸீயிலுள்ள வான்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நாஷ்வெல்லேயில் போக்குவரத்தை சற்றுநேரம் தடுத்து, சிவில் உரிமை பாடல்களை பாடிய வேளையில், மன்ஹாட்டன் நகரில் அன்பு பேரணி என்று அழைக்கப்பட்டதில் நுற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டங்கள் பொதுவாக அமைதியானவைகளாக இருந்தன. சிக்காகோவில் இன்னும் அதிக போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.