வெனிசுவெலா பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மீண்டும் பேச்சுவார்த்தை

வெனிசுவெலாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் தலைநகர் கராகாஸில் மீண்டும் தொடங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெனிசுவேலாவில் பணவீக்கம் அதிகரிப்பு

உணவு பற்றாக்குறையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் இடதுசாரி அதிபர் நிக்கோலாஸ் மதுரோ எதிர்க்கட்சி தலைவர்களோடு ஆலோசனை நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சற்று முன்னர் பேசுகையில், தீர்வு ஒன்றை காணவதற்கு அவரது அதிகாரத்தில் இயன்ற அனைத்தையும் செய்திருப்பதாக மதுரோ தெரிவித்தார்.

ஆனால், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு மீண்டும் அழைப்பு விடுப்பதற்கு மதுரோ மறுத்துவிட்டதை, வெனிசுவெலாவின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் வழி என்று எதிர்க்கட்சி தலைவர் விவரித்திருக்கிறார்.

எண்ணெய் விலை வீழ்ச்சி வெனிசுவேலாவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கும், அதிபருக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறுவதற்கும் வழிவகுத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்