ஆஃப்கானிஸ்தான்: மேம்பாட்டு நிதியை ஒழுங்காக செலவு செய்யாத மூன்று அமைச்சர்கள் நீக்கம்

  • 12 நவம்பர் 2016

ஆஃப்கானிஸ்தானில் உள்ள மூன்று அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்ட நிதியை முறையாக செலவு செய்யாத காரணத்தால் அவர்களை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை EMMANUEL DUNAND
Image caption ஆஃப்கானிஸ்தானில் உள்ள மூன்று அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்ட நிதியை முறையாக செலவு செய்யாத காரணத்தால் அவர்களை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டு விவகாரம், பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் ஆகிய இலாகாக்களை இந்த அமைச்சர்கள் கவனித்து வந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவர் மீதும் நாடாளுமன்றம் உறுப்பினர்கள் தனித்தனியாக வாக்களித்தனர்.

இந்த நிதியை செலவு செய்யாவிட்டால், பெரும்பாலான நிதியானது அதை வழங்கிய வெளிநாட்டு கொடையாளர்களுக்கே திரும்பச் சென்றுவிடும் என்று காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மற்ற அமைச்சர்களும் இதே போன்ற வாக்கெடுப்பை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

பல மாதங்களுக்கு முன்பே நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால், அதனை ஒரு வருட காலத்திற்கு அதிபரின் ஆணை மூலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்