தெற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு சூஃபி தர்காவில் குண்டு வெடிப்பு; 30 பேர் பலி

தெற்கு பாகிஸ்தானில் தொலைதூரத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சூஃபி தர்காவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்தச் சம்பவத்தில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

உள்ளூர் தொலைக்காட்சியில், துறைமுக நகரமான கராச்சியின்  வடக்கு பகுதியில், நூற்றுக்கணக்கான மக்கள் தொலைவில் உள்ள ஷா நூரானி வழிபாட்டுத்தலத்தில் இருந்தனர் என்று கூறுகிறது.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்சுகள் வந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்