பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிட்டது ஒபாமா நிர்வாகம்

  • 12 நவம்பர் 2016

வருகிற ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை பெற அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் மேற்கொண்டிருந்த அனைத்து முயற்சிகளையும் கைவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Alex Wong

எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் உருவான பசிபிக் பிராந்திய கூட்டு ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தத்தின் நிலை தற்போது அடுத்துவரக்கூடிய நிர்வாகத்தின் கைகளிலே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா

இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த டிரம்ப், இதனை பேரழிவு என்றும், இந்த ஒப்பந்தத்தால் மேலும் பெருமளவிலான வேலைவாய்ப்பு வெளிநாடுகளுக்குச் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவை தவிர்த்து, பசிபிக்கை சுற்றியுள்ள 12 நாடுகள் ஈடுபடுகின்ற, பெரும்பாலும் விவசாய பொருட்கள் உள்ளடங்குகின்ற ஓர் ஒப்பந்தமாக உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்