ஃபிரான்ஸில் தொடங்கவிருக்கும் பாரிஸ் தாக்குதலின் ஒராண்டு நிறைவு நிகழ்ச்சி

  • 13 நவம்பர் 2016

ஃபிரான்ஸின் பாரிஸில் 130 பேரை பலிவாங்கிய இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் நடந்து ஒராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில், இன்னும் சற்று நேரத்தில் அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்டாட் ட பிரான்ஸ் அரங்கில் தொடங்கி பேட்டக்லாங் கச்சேரி மண்டபம் வரை, தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு இடங்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் விதமாக கல்வெட்டுகளை அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்தும் பாரிஸ் மேயரும் திறக்கவுள்ளனர்.

ஃபிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால், நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் அவசர நிலையை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக ஃபிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்,

பாப் கலைஞர் ஸ்டிங்கின் இசை கச்சேரியுடன் பேட்டக்லாங் கச்சேரி மண்டபம், சனிக்கிழமையன்று மீண்டும் திறக்கப்பட்டது.