இட்ஸக் ராபீன் மீது வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டு - நெதன்யாஹூ மறுப்பு

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், தனக்கு முன்பு பிரதமராக இருந்த இட்ஸாக் ராபின் படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னால், அவர் மீது வெறுப்புணர்வை தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூ மறுத்துள்ளார்.

Image caption இட்ஸாக் ராபினை கொலை செய்ததற்கு, யூத கடும்போக்குவாதி இகல் அமிர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்

ராபின் படுகொலை ஓர் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு என்று கூறியிருக்கும் நெதன்யாஹூ, விஷம் கக்கும் அறிக்கைகளை கண்டித்திருப்பதை காட்டும் காணொளி பதிவுகளையும் பதிவேற்றியிருக்கிறார்.

பாலத்தீனர்களோடு ஏற்படுத்திக் கொண்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தை எட்டியதற்காக கூட்டாக நோபல் பரிசு பெற்றவர் இட்ஸாக் ராபின்.

அவரை கொலை செய்ததற்கு, யூத கடும்போக்குவாதி இகல் அமிர் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்.