ரொஹிங்கா மக்கள் மீது தாக்குதல் - மியான்மார் அரசு ஒப்புதல்

நாட்டின் மேற்கு பகுதியில் ரொஹிங்கா முஸ்லிம் சிறுபான்மையினர் கிராமங்களில் தாக்குதல் நடத்த ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தியதை மியான்மார் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மியான்மார் ராணுவத்திற்கும் ரொஹிங்கா முஸ்லிம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 படையினர் உள்பட குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதை அடுத்து விமான தாக்குதல் ஆதரவு கோரப்பட்டதாக மியான்மார் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மியான்மாரில் பாரபட்சங்களை சந்திக்கும் ரொஹிங்கா முஸ்லிம்களின் தாயகமாக வங்கதேசத்தின் எல்லையில் இருக்கும் ரக்ஹைன் மாநிலம் விளங்குகிறது.

ரொஹிங்கா முஸ்லிம் இனத்தை மியான்மார் ராணுவம் அழிக்க முயல்வதாக ரொஹிங்கா வட்டாரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த நடவடிக்கை தாக்குதல்தாரிகளை தேடுவதன் ஒரு பகுதியாக அமைந்தது என்று ஜனநாயக ஆதரவு அரசியில்வாதி ஆங் சான் சூச்சியால் வழிநடத்தப்படும் அரசு கூறுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்