காலத்தால் அழியாத காதல்

  • 13 நவம்பர் 2016

65 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன் ஜோடி ஒன்று இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது.

Image caption 65 ஆண்டுகளாக பிரிந்திருந்த பிறகு வெள்ளிக்கிழமை திருமணத்தில் இணைந்த ஜோடி

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று.

அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது.

அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜோடி தொடக்கத்தில் பிரிய வேண்டியதாயிற்று.

படத்தின் காப்புரிமை Family handout
Image caption மோவாகெஸ் ஓவிய கலைஞராக இருந்தது, ஹெலன் அன்ரேவை விட்டு அவர் பிரிய காரணமாயிற்று

"1950-களில் ஓவிய கலைஞராக ஒரு மருமகன் இருப்பது மதிக்கப்படும் எதிர்கால தொழிலாக கருதப்படவில்லை" என்று டெபியே வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.

"அந்நாட்களில் பெற்றோர் சொல்வதை போல நடந்து கொண்டதால், இந்த இணை மனமுடைந்து போனது".

தன்னுடைய தாய் மூன்றாவது முறையாக விதவை ஆனபோது, மோவாகெஸை தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்ததாக டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் பேசத் தொடங்கினர். உறவை புதுப்பித்து கொண்டனர். தீவிர காதலில் விழுந்தனர். அவர்களை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

Image caption ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த காதல் ஒருபோதும் குறையவில்லை என்று இந்த ஜோடி தெரிவித்திருக்கிறது

இந்த ஜோடிகள் அவர்களுக்கு இடையே 5 துணைவர்கள் வந்து போய் வாழ நேரிட்ட பிறகு, வெள்ளிக்கிழமை மதியம் ரிபிலெ பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்திருக்கின்றனர் என்று டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் காதலிப்பது போல நீங்களும் யாரையாவது காதலித்தால், அது பயனில்லாமல் போகாது" என்று மோவாகெஸ் கூறியிருக்கிறார்.

"நான் அவரை வாழ்நாள் முழுவதும் காதலித்திருக்கிறேன். இப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒன்றாகியிருக்கிறோம்" என்று மோவாகெஸின் புதிய திருமதி தெரிவித்திருக்கிறார்,

தொடர்புடைய தலைப்புகள்