மியான்மாரில் ரொஹிங்கா தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் பலி

  • 13 நவம்பர் 2016

மியான்மாரில் உள்ள வட ரக்ஹைன் மாகாணத்தில் ராணுவம் மற்றும் ரொஹிங்கா முஸ்லிம் தீவிரவாதிகள் என சந்தேகிப்போருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மியான்மாரில் ரோஹின்ஜா தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் பலி

நேற்றைய தினம், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று திடீரென படையினர் மீது தொடுத்த தாக்குதலை தொடர்ந்து மோதல் வெடித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சண்டையில் இரு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து 6 இறந்த தாக்குதல்தாரிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வங்கதேச எல்லையில் உள்ள வட ரக்ஹைன் ரொஹிங்கா முஸ்லிம்களின் இல்லமாக இருந்து வருகிறது. கடந்த மாதம், எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நிலைகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் 9 போலிசார் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்