நியுஸிலாந்தில் 7.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ளதாக அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நியுஸிலாந்து அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை USGS
Image caption நியுஸிலாந்தில் 7.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நகரின் மையப்பகுதி அழிந்து போனது.

அதன் பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

பசிபிக் வலயத்தைச் சுற்றி நிகழும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களின் நேரடி தாக்குதல் மையத்தில் நியுஸிலாந்து இருப்பதால் எப்போதும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்