பாகிஸ்தானில் புதிய துறைமுகத்தை தொடங்கி வைக்க சீனாவின் முக்கிய பிரமுகர்கள் வருகை

பாகிஸ்தானில் உள்ள வதார் நகரில் அரேபிய கடலில் அமைந்துள்ள புதிய துறைமுகம் ஒன்றை சீனா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய துறைமுகம்

சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்த துறைமுகம், சீனாவின் நிலப்பகுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு கப்பல் மூலம் பொருட்களை கொண்டு செல்ல பயன்பட உள்ளது.

இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு முக்கிய புதிய விநியோக பாதையை இந்தத். துறைமுகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதுவரை, மலேசியா மற்றும் இந்தோனீஷியா இடையிலான மலாக்கா ஜலசந்தியை மட்டுமே சீனா நம்பியிருந்தது.

இயந்திரங்கள், அரிசி மற்றும் பஞ்சு ஆகிய பொருட்கள் அடங்கிய தொடரணி ஒன்று சீனாவின் ஷின் ஜியாங் மாகாணத்திலிருந்து பனி நிறைந்த காரகோரம் நெடுஞ்சாலை வழியாக பயணித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்