70 ஆண்டுகள் கழித்து இரவில் வானில் தோன்றிய 'சூப்பர் மூன்'

எழுபது ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய மற்றும் அதிக பிரகாசமிக்க முழு நிலவு உலகம் முழுவதும் இரவு நேரத்தில் வானில் தோன்றி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 70 ஆண்டுகள் கழித்து இரவில் வானில் தோன்றிய 'சூப்பர் மூன்'

நிலவின் நீள் வட்டப்பாதை காரணமாக, பூமி மற்றும் நிலவு இரண்டும் வழக்கத்திற்கு மாறாக மிக நெருங்கி வருவதன் காரணமாக, பெரிதாகத் தோற்றமளிக்கும் நிலவை சூப்பர் மூன் என்றழைக்கிறார்கள்.

இந்த நிலவு, பூமிக்கு மிக அதிக தொலைவில் இருக்கும் போது தெரிவதைக் காட்டிலும், இந்த சூப்பர் மூன் நிலையில், 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் பிரகாசமாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இதோடு, 2034 ஆம் ஆண்டில் தான் அடுத்த முறை இதே போல முழு நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.

முழு நிலவானது அடிவானத்தில் குறைவான உயரத்தில் இருக்கும் போது மரங்கள் மற்றும் உயரம் கொண்ட கட்டடங்களுக்கு அருகே இந்த நிகழ்வை சிறப்பாக காண முடியும்.

இதோடு, 2034 ஆம் ஆண்டில் தான் அடுத்த முறை இதே போல முழு நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.

தொடர்புடைய தலைப்புகள்