சீனா - அமெரிக்கா இடையேயான உறவு : ஷி ஜின்பிங் மற்றும் டிரம்ப் விரைவில் சந்திக்க உள்ளனர்

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து ஆலோசிப்பதற்காக, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் விரைவில் சந்தித்து கொள்ள தொலைபேசி வாயிலாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்

சீனா - அமெரிக்க உறவில் ஒத்துழைப்பு என்பது மட்டுமே ஒரே வழியாக இருக்கும் என்று டொனால்ட் டிரம்பிடம் ஷி ஜின்பிங் கூறியதாக சீன தொலைக்காட்சி கூறியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரம் முழுவதும், சீனா நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது என்றும், நிதி செலவணி மதிப்பை திரிக்கும் நாடு என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு 45 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

தொலைபேசி அழைப்பில் இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் மீதான பரஸ்பர மரியாதை குறித்து ஒரு தெளிவான உணர்வை வெளிப்படுத்தியதாக டொனால்ட் டிரம்ப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்