நியூசிலாந்தில் நிலநடுக்கம், சுனாமி, சவால்கள்

நியூசிலாந்தில் நிலநடுக்கம், சுனாமி, சவால்கள்

நியூசிலாந்தில் இரண்டு கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நடுக்கம் சுனாமியைத் தூண்டியது. பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு மேலும் நில அதிர்வுகள் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கரையோரமாக உள்ள மக்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் பல நகரங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்தும் பாதிப்பு.