டிரம்ப் அதிபராவதற்கு எதிராக தொடரும் போராட்டங்கள்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவில் தொடர்ந்த வண்ணமுள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் மற்றும் வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரம் ஆகிய இடங்களில் மிக பெரிய அளவில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இவ்விரு மாநிலங்களும் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாக மிக வலுவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Reuters

இதனிடையே, அதிபர் மற்றும் செனட் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மீண்டும் கட்சியை வளர்க்கும் செயல் முறையை ஜனநாயக கட்சி துவங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் பதவிக்கு பலரும் தங்கள் பெயரை முன்மொழிந்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்