பாலியல் குற்றச்சாட்டு: கனவில் அடையாளம் காணப்பட்ட நபர் 28 ஆண்டுகள் சிறைக்கு பின் விடுதலை

  • 15 நவம்பர் 2016

தன்னை பாலியல் வல்லுறவு செய்த நபரை தனது கனவில் அடையாளம் கண்டதாக ஒரு பெண் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரு நபரை அமெரிக்காவின் கொலராடோ மாநில ஜுரிகள் விடுதலை செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption விடுதலை செய்யப்பட்ட கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல் தன் பேரக் குழந்தைகளுடன்

தான் தவறாக அடையாளம் காணப்பட்டதாக கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல் என்றழைக்கப்படும் இந்நபர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.

தான் தவறு செய்யவில்லை என்று மோசஸ் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மற்றொரு கைதி எழுதிய கடிதத்தில் அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தது தானே என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

கிளாரென்ஸ் மீது வழங்கப்பட்ட தண்டனையை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்து அவரை விடுதலை செய்தாலும், பொது மக்களின் கண்டனங்களையம் மீறி டென்வர் மாவட்ட வழக்கறிஞர் மீண்டும்

இந்த வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்