மியான்மரில் ரொஹிஞ்சா பிரிவினர் வாழும் பகுதிகளில் 69 தாக்குதல்காரர்களை கொன்றுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் உள்ள ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களில் வன்முறையில் ஈடுபட்ட 69 தாக்குதல்காரர்களை தாங்கள் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வன்முறையில் எரிக்கப்பட்ட வீடுகள்

மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிக்கு தாங்கள் பதில் நடவடிக்கை எடுத்து வருவதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால், குடிமக்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகவும், தங்களின் கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் ரொஹிஞ்சா மக்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

மியான்மரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறித்த அதிகாரபூர்வ செய்திகளில் ஓட்டைகள் உள்ளன என்றும் அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட அதிகமான மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மியான்மரில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்