மியன்மாரில் இனப்படுகொலையா? ஆசியான் அமைப்பு கவலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மியன்மாரில் இனப்படுகொலையா? ஆசியான் அமைப்பு கவலை

மியன்மாரின் ரக்கைன் பிராந்தியத்தில் அனைத்து தரப்பாரும் சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கவேண்டும் என்று ஐநாவின் முன்னாள் செயலாளர் கோரியுள்ளார்.

அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச கவலைகள் அதிகரித்துவருகின்றன.

மியான்மரில் கலவரத்தில் ஈடுபட்ட ரொஹிஞ்சா முஸ்லிம்கள் 69 பேரை கொன்றுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் மியன்மாரில் கொலைகள் இனப்படுகொலை போன்ற மற்ற கொடூரங்களும் நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றுவதாக அசியான் அமைப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.

ஆனால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதாக மியன்மார் அதிபர் அலுவலக துணைத்தலைமை இயக்குநர் சோதே பிபிசியிடம் தெரிவித்தார்.