உலகின் மிகப்பெரிய அகதிமுகாமை மூடும் கென்யாவின் முடிவு சரியா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் மிகப்பெரிய அகதிமுகாமை மூடும் கென்யாவின் முடிவு சரியா?

கென்யாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ததாப் அகதி முகாமை மூடும் முடிவை ஆறுமாதம் தள்ளிவைப்பதாக கென்ய அரசு அறிவித்துள்ளது.

ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆனாலும் சொமாலிய அகதிகளை மீண்டும் சொந்த ஊரில் குடியேற்றும் நடவடிக்கை தொடரும் என்று கென்ய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தபாப் முகாமிலிருக்கும் அகதிகளில் பலர் சொமாலியா திரும்ப அச்சம்.

ததாப் அகதிமுகாமிலிருக்கும் சொமாலிய அகதிகளின் நிலைமையை நேரில் சென்று பிபிசி படம்பிடித்துள்ளது.