போலிச் செய்திகளை தடுக்க கூகிள் நடவடிக்கை: சுந்தர் பிச்சை

போலிச் செய்திகளை தடுக்க கூகிள் நடவடிக்கை: சுந்தர் பிச்சை

போலிச் செய்திகள் தமது தளத்தில் வெளியாவதை தடுக்க கூகிள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கூகிளில் நாங்கள் சில விழுமியங்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். கருத்துச் சுதந்திரத்தை கூகிள் மதிப்பளித்து, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்கிறது எனவும் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட சில குறைபாடுகளில் இருந்து கூகிள் கற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.