வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தால் நியூ யார்க் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: நகர மேயர்

விரைவில் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எவ்வாறான விதிமுறைகளை அமல்படுத்துமோ என்ற அச்சத்தில் நியூ யார்க் நகர மக்கள் இருப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிடம், தான் தெரிவித்ததாக அந்நகர மேயர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பில் ட பிளாசியோ

டிரம்ப் டவர் கட்டடத்தில் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த நியூ யார்க் நகர மேயரான பில் ட பிளாசியோ, நாடு கடத்தப்படுவதிலிருந்து ஆவணங்களற்ற குடியேறிகளை பாதுகாக்க தான் முயற்சிக்கப் போவதாக டிரம்பிடம் எச்சரித்துள்ளார்.

குடியேறிகளின் மொத்த நகரமாக விளங்கும் நியூ யார்க்கில் டொனால்ட் டிரம்ப்பின் திட்டங்கள் வேலை செய்யாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆவணங்களற்ற கிட்டத்தட்ட மூன்று மில்லியன் குடியேறிகளை வெளியேற்றவோ அல்லது சிறையில் அடைக்கும் நடவடிக்கை எடுப்பதிலோ டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இவர்கள் குற்றவியல் வழக்கு பின்னணி உள்ளவர்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்