நைஜீரியாவில் ஜிகாதி குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்

நைஜீரியாவில் போகோ ஹராமின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் 1000-க்கு மேலான குடிமக்கள் வெளியேறி, சாட் ஆட்சியாளர்களிடம் சரணடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

சிலர் தன்னார்வத்துடனும், சிலர் கட்டாயப்படுத்தப்பட்டும் இந்த ஜிகாதி குழுவுக்காக சண்டையிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளும் இதில் அடங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

சரணடைந்தோர் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் சாட் ஐநா அலுவலகத்தின் தலைவர், அதில் பெரும்பாலோர் சமூகத்தோடு ஒன்றிணைய உதவி வழங்கப்படும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்,

ஏனையோர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

நைஜீரியாவில் ஆரம்பிக்கப்பட்ட போகோ ஹராம், அந்த பிராந்தியத்திலுள்ள பல நாடுகளில் இருந்து படையினரை ஆளெடுத்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்