தான் இறந்த பிறகு தனது உடலை பதனிடும் முறையில் பாதுகாக்க கோரிய சிறுமியின் வேண்டுகோள் ஏற்பு

தான் இறந்த பிறகு தனது உடலை பதனிடும் முறையில் பாதுகாப்பதால் மீண்டும் உயிர் பெற முடியும் என்று நம்பிய ஒரு 14 வயது சிறுமி அவர் உயிரிழப்பதற்கு முன்னர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சட்ட போராட்டத்தில் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

உறையும் கடுங்குளிர் நிலையில் உயிரற்ற தனது உடலை, தன் தாய் பாதுகாக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், தன் தந்தை இதனை செய்யக் கூடாது என்றும் தீராத ஒரு அரிய வகை புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட இந்த பதின்ம வயது பெண் தான் தாக்கல் செய்த வழக்கில் தனது இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமியின் தாயார் அவரது உடலை பாதுகாப்பது குறித்து தீர்மானிக்க அனுமதிக்கப்படுவர் என்று தீர்ப்பளித்தார்.

அக்டோபர் மாதம் காலமான இந்த பதின்ம வயது பெண்ணின் உடல், அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது உடல் பதனிடப்பட்டது.

இந்த வழக்கின் தகவல்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது.

பெயர் வெளியிட முடியாத இந்த பதின்ம வயது பெண் லண்டன் பகுதியில் வாழ்ந்து வந்தார்

தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், உயிரற்ற உடல்களை கடுங்குளிரில் பாதுகாக்கும் நடைமுறை மற்றும் தொழில் நுட்பம் குறித்த தகவல்களை இணையத்தளத்தில் இவர் தேடியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்