தெற்கு சூடானுக்கு ஆயுதங்கள் விற்க தடை விதிக்க வேண்டிய ஐ.நா. கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு

இனப்படுகொலைகளை தடுக்க, தெற்கு சூடானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகர் விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தெற்கு சூடானுக்கு ஆயுதங்கள் விற்க தடை விதிக்க கோரிக்கை

தெற்கு சூடான் நாடு வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாவும், இங்குள்ள நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தெற்கு சூடானுக்கு ஆயுத தடை விதிக்கும் இந்த திட்டத்திற்கு ரஷ்யத் துணைத் தூதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெற்கு சூடானில் நடக்கும் மோதல்களை தீர்ப்பதற்கு இந்த நடவடிக்கை ஒருக்காலும் பயன்தராது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில், தெற்கு சூடானில் மூன்று வருடங்களுக்கு முன்னர் அரசியல் சண்டையாக துவங்கிய மோதல், தற்போது ஒரு முழு இனரீதியான போராக மாறும் அபாயம் உள்ளது என்று இனப்படுகொலைகளை தடுக்கும் ஐ.நா. பிரிவின் ஆலோசகரான அடாமா ஜெங் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்