நேட்டா படையில் பணிபுரியும் நாடுகளில் தஞ்சம் கோரும் துருக்கி ராணுவத்தினர்

நேட்டோ படையில் பணிபுரியும் துருக்கி ராணுவத்தினர் சிலர், தாங்கள் பணிபுரியும் சில நாடுகளிலேயே தஞ்சம் கோரியிருப்பதாக நேட்டோ பொது செயலாளர் என்ஸ் ஸ்டோல்டென்பெர்க் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சட்டப்படியான ஆட்சிக்கு துருக்கி மதிப்பளிக்க ஸ்டோல்டென்பெர்க் கோரிக்கை

கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பையும், அதன் விளைவாக ஆட்கள் களையெடுப்பு நடப்பதையும் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ள படுகிறது.

இந்த தஞ்சம் கோரிக்கை அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டிய விடயம் என்று ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இஸ்தான்புல்லில் பயணம் மேற்கொள்ளும் போது, இந்த மனித உரிமை பிரச்சனை பற்றி துருக்கிய அதிகாரிகளிடம் பேசப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.

சட்டப்படியான ஆட்சிக்கு துருக்கி மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்