மொசுல் அருகே மற்றொரு மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு

  • 19 நவம்பர் 2016

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த தீரவிரவாதிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில், இராக் அரச படையினர் சந்தேகிக்கப்படும், பலரைக் கொன்று புதைத்துள்ள மற்றொரு சவக்குழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA

மொசூல் நகரத்தின் தெற்கு பகுதியில், தால் அத் தஹாப் என்ற கிராமத்தில் யாரும் பொதுவாக அணுகாத ஒரு இடத்தில் அந்தச் சவக்குழி இருப்பது பத்திரிகையாளர்களுக்குக் காண்பிக்கப்பட்டது.

எலும்புத் துண்டுகள் மற்றும் புல்லட் குப்பிகள் அங்குச் சிதறி இருந்தன. மற்றும் அங்குத் தாங்கமுடியாத அளவில் துர்நாற்றம் வீசியது.

பெரும்பாலும் ஐ.எஸ்.சிடம் பிடிபட்ட சுமார் 40 பாதுகாப்பு படையினர் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என உள்ளூர் மக்கள் கூறினார்.