புதிய கர்தினால்களாக 17 ஆயர்களை நியமிக்கும் போப்

  • 19 நவம்பர் 2016

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதுபெரும் அதிகார வரிசையில் தன்னுடைய அடையாளத்தை பதிப்பதை தொடர்கின்ற நிலையில், வத்திக்கானில் விரைவில் நடைபெற இருக்கும் வழிபாட்டில் 17 புதிய கர்தினால்களை போப் பிரன்சிஸ் நியமிக்க இருக்கிறார்,

படத்தின் காப்புரிமை Reuters

இந்த கர்தினால்கள் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்கள்.

படத்தின் காப்புரிமை Andrew Medichini

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அமெரிக்காவிலிருந்து மூன்று கர்தினால்களையும் முதல் முறையாக போப் பிரான்சிஸ் நியமிக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

போப்புக்கு ஆலோசனை வழங்கி, இவருக்கு அடுத்த போப்பை தெரிவு செய்கின்ற கர்தினால் அவையில் இடம்பெறும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானோரை போப் பிரான்சிஸ் தெரிவு செய்திருப்பதை இந்த புதிய நியமனங்கள் காட்டுக்கின்றன.