ஏமனில் 2 நாள் போர்நிறுத்தம் - சௌதி கூட்டணி படை அறிவிப்பு

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருகின்ற ஏமன் அரசுக்கு ஆதரவு வழங்கும் சௌதி தலைமையிலான கூட்டணிப் படை 48 மணிநேர போர்நிறுத்தத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

கிளர்ச்சியாளர்களும், அவர்களின் கூட்டாளிகளும் இதனை கடைபிடித்து, தென் கிழக்கில் அமைந்திருக்கும் டாயிஸ் போன்ற முற்றுகையில் இருக்கும் நகரங்களில் விமானம் மூலம் உதவி வழங்குவதை அனுமதித்தால், இந்த போர் நிறுத்தம் புதுப்பிக்கப்படும் என்று சௌதி செய்தி நிறுவனத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக, இந்த வாரத் துவக்கத்தில், ஒரு போர் நிறுத்தத்திற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்திருந்தார்.

ஆனால், சர்வதேச ஆதரவு பெற்றிருக்கும் ஏமன் அரசு இதில் தான் ஈடுபடுத்தப்படவில்லை என்று தெரிவித்துவிட்டது.