நான்காவது வாரமாக சோலில் அதிபருக்கு எதிராக போராட்டம்

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹெ பதவி விலக வேண்டும் என்று கோரி, தொடர்ந்து நான்காவது வாரமாக சோலின் தெருக்களில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அதிபரின் தோழி சோய் சூன் சில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்

பல லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அதிபர் இன்னும் ஆட்சியை தொடர்ந்து வருகிறார்.

ஒரு வாரத்திற்கு மேலான பிறகு முதல் முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்வில் அதிபர் தோன்றியிருப்பது, அதிபராக தொடர்வதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளதை காட்டுகிற அடையாளமாகும்.

படத்தின் காப்புரிமை AFP

தன்னுடைய நீண்ட கால தோழி சோய் சூன் சில்-ஐ அரசியலில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்த அதிபர் அனுமதித்ததால் போராட்டக்காரர்கள் மிகவும் சினம் அடைந்துள்ளனர்.

சோய் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்