பிரான்ஸில் அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க கட்சிகள் மும்முரம்

பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடக்க 5 மாதங்களுக்கு முன்னால், நடைபெறுகின்ற ஆரம்பகட்ட தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள், அவர்களின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.

Image caption பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாமதமாகப் பெருகிய ஆதரவு இந்த வேட்பாளர் தேர்தலை மும்முனை போட்டியாக மாற்றியிருக்கிறது.

இதில் போட்டியிடுகின்ற 7 வேட்பாளர்களில் பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மற்றும் முந்தைய பிரதமர் அலாங் யுபே ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தனர்.

ஆனால், முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாமதமாகப் பெருகிய ஆதரவு இதனை மும்முனை போட்டியாக மாற்றியிருக்கிறது.

ஆளும் சோசலிஸ்ட் கட்சியில் காணப்படும் குழப்பமான சூழ்நிலையில், அடுத்த வாரம் நடைபெறும் இரண்டாவது தேர்தலில்,வெற்றி பெறுபவர், மே மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலின் இறுதி சுற்றில் போட்டியிடும் தீவிர வலது சாரி தலைவர் மர்ரீன் ல பென்னுடன் மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்