தென் கொரிய அதிபர் பார்க் ஊழலில் ஈடுபடவில்லை - வழக்கறிஞர்

தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹெ-வின் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஊழல் மோசடியில், அதிபர் ஈடுபடவில்லை என்று அவரது சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல வார மாபெரும் போராட்டங்கள் தென் கொரிய அதிபர் பார்க் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலுப்படுத்தி வருகிறது

அதிபர் தன்னுடைய நீண்டகால தோழியான சோய் சூன் சில்-ஐ அரசியல் விடயங்களில் தலையிடவும், சோயின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தென் கொரிய நிறுவனங்கள் நன்கொடை அளிக்க அழுத்தங்கள் கொடுக்கவும் அனுமதித்ததாக தென் கொரிய அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டுக்கள் கற்பனையையும், ஊகத்தையும் அடிப்படையாக கொண்டவை என்று அதிபரின் வழக்கறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அதிபர் பார்க் மீதான குற்றச்சாட்டுக்கள் கற்பனையையும், ஊகத்தையும் அடிப்படையாக கொண்டவை - அதிபரின் வழக்கறிஞர்

அதிபரை குற்றம்சாட்டி விசாரிப்பதில் இருந்து அவருக்கு பதவி ரீதியான பாதுகாப்பு இருப்பதால், அவரை புலனாய்வாளர்கள் விசாரிக்க முடியாது.

ஆனால், சோய் சூன் சில் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல வாரங்களாக சோலின் தெருக்களில் மக்கள் அணிதிரண்டு நடத்துகின்ற மாபெரும் போராட்டங்களால் அதிபர் பார்க் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்