பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மக்கள் வாக்களிப்பு

  • 20 நவம்பர் 2016

பிரான்சின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க மத்திய வலது சாரி எதிர்க்கட்சியான, குடியரசு கட்சி நடத்துகின்ற ஆரம்பகட்ட தேர்தலில், பிரான்ஸ் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

களத்தில் உள்ள முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசியும், இரண்டு முன்னாள் பிரதமர்களான அலாங் யுபே, பிரான்சுவா ஃபியோங் ஆகிய மூன்று பேரும் பிரபல வேட்பாளர்களாக உள்ளனர்.

இதில் வெற்றி பெறுபவர், அல்லது அடுத்தவாரம் நடைபெறும் இரண்டாவது தேர்தலில்,வெற்றி பெறுபவரில் ஒருவர், பிரான்சின் அடுத்த அதிபராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது என பாரிஸில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தீவிர வலது சாரி கட்சியின் அதிபர் வேட்பாளரான மர்ரீன் ல பென் இந்த அதிபர் தேர்தலில் மிக வலுவான போட்டியாளராக இருப்பார்.

ஆனால், இரண்டு சுற்று வாக்கெடுப்பு முறை அவருக்கு எதிராகவே அமையும் என்பதால், அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இல்லை.

தொடர்புடைய தலைப்புகள்