கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு பாதிரியார்கள் பாவ மன்னிப்பு வழங்குவது நீடிப்பு

ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், கருக்கலைப்புச் செய்த பெண்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை, போப் பிரான்ஸிஸ் காலவரையின்றி நீட்டித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஞாயிற்றுக்கிழமை முடிவு பெற்ற கருணையின் புனித ஆண்டு என போப்பால் ஆணையிடப்பட்ட காலம் வரை அந்த அதிகாரங்கள், கடந்த வருடம் பாதிரியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அதற்கு முன்னதாக கருக்கலைப்புச் செய்த பெண்களிற்கு பாவ மன்னிப்பு வழங்கும் அதிகாரம், பேராயர்கள் மற்றும் சிறப்பு பாவ மன்னிப்பு வழங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கருக்கலைப்பு பெரும் பாவம் என்னும் ரோமன் கத்தோலிக்கக் கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்திய போப், குற்றம் புரிந்தவர்கள் அதுகுறித்து வருந்தினால் கடவுள் அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு வழங்கக் கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.