கடும் போக்கு நிலைப்பாடுகளில் இருந்து டொனால்ட் டிரம்ப் மாறிவிட்டாரா?

ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீது வழக்கு தொடுக்கப் போவதாக முன்னர் அளித்த தனது வாக்குறுதியை கைவிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் இனி தான் திறந்த மனதுடன் செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டொனால்ட் டிரம்ப்

இது தனது அதிபர் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் வெளிப்பட்ட கடும்போக்கு நிலைப்பாடுகளில் இருந்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் சற்றே தணிந்துள்ளது விட்டது போல் தோன்றுகிறது.

பல்வேறு அம்சங்கள் குறித்தும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கிளிண்டன் குடும்பத்தாரை தான் காயப்படுத்த விரும்பவில்லையென்றாலும், தனது பாதையில் மேலும் செல்லப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிதீவிர வலது அனுதாபிகள் மற்றும் வெள்ளை இன மேலாதிக்கவாதிகளின் ஆதரவு அவருக்கு கிடைத்தது குறித்து கேட்கப்பட்டபோது, அவர்களுக்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், அவர்களின் ஆதரவை ஒதுக்குவதாகவும் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்