தென் கொரிய அதிபர் அலுவலகம் வயாகரா மாத்திரைகளை வாங்கிய விசித்திரம்

அதிக எண்ணிக்கையிலான வயாகரா மாத்திரைகளை தென் கொரிய அதிபர் மாளிகை வாங்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருப்பதன் மூலம், அதிபர் பார்க் குன் ஹெ-இன் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புடைய தென்கொரிய மோசடி விசித்திரமான திருப்பு முனையை அடைந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹெ "வேறுபட்டதொரு உலகில்" வாழ்வதாக மக்கள் பலரும் நம்புகின்றனர்

பொதுவாக, ஆணுறுப்பு விறைப்பு தன்மையின் குறைபாட்டிற்காக பயன்படுத்தப்படும் இந்த வயாகரா மாத்திரைகளில் சுமார் 400-ஐ அதிபர் மாளிகை வாங்கியிருப்பது, அந்த மாத்திரைகள் பயன்படுத்தப்படாத நிலையிலும், கிழக்கு ஆப்பிரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது, அதீத உயரங்களில் ஏற்படும் சுகவீனத்திற்காக வாங்கப்பட்டது என்று அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் பார்க்கின் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புடைய தென்கொரிய மோசடிக்கு இந்த வயாகரா கொள்முதல் விசித்திரமான திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹெ, தன்னுடைய நீண்டகால தோழியான சோய் சூன் சில்-ஐ, நாட்டின் விவகாரங்கள் முதல் அதிபர் அணியும் ஆடை வரை அனைத்து காரியங்களிலும் செல்வாக்கு செலுத்த அதிபர் அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில் இந்த வயகரா மாத்திரை விவகாரமும் வெளிவந்துள்ளது.

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹெ "வேறுபட்டதொரு உலகில்" வாழ்வதாக மக்கள் பலரும் நம்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அதீத உயரங்களில் ஏற்படும் சுகவீனத்திற்காக வயாகரா மாத்திரை வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

வயாகரா மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிபர் மக்களை விட்டு வெகுதொலைவில் இருப்பதாக வெளிப்படுத்துவதோடு, அதிபர் பதவி விலக வேண்டும் என்கிற அழுத்தங்களை அதிகரிக்கும் என்று சோலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் இவான்ஸ் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்