148 ஆயிரம் டாலர் ஏலம் போன பதின்ம வயதினரின் கவிதை
நாஜி இனப்படுகொலை பற்றி அதிகம் படிக்கப்பட்ட மிகக் கடுமையான கண்டனம் என்று கருதப்படும் நாட்குறிப்பு ஒன்றை எழுதிய டச்சு பதின்ம வயதினர் அன்னே ஃபிராங்கால் எழுதப்பட்ட கவிதையின் அபூர்வமான கையெழுத்து படிவம் ஒன்று 148 ஆயிரம் டாலர் தொகைக்கு நெதர்லாந்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
இந்த தொகை எதிர்பார்த்ததை விட அதிகமான தொகையாகும்.
நாஜிக்களின் சித்தரவதையில் இருந்து தப்பிக்க பிராங்கின் குடும்பம் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டாங்கில் இரண்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்வதற்கு முன்னர் அவர் வேதனையை வெளிப்படுத்தும் இந்த எட்டு வரிக் கவிதை வேலை பற்றிய ஒரு ஆன்மிக படைப்பு .
1944 ஆம் ஆண்டு அவருடைய குடும்பம் காட்டிகொடுக்கப்பட்டது.
போர் முடிவதற்கு சற்று முன்னால் 15 வயதான அன்னி ஃபிராங் பெர்கென்-பெல்சென் சித்தரவதை முகாமில் கொல்லப்பட்டார்.