தன்னை எதிர்த்து பிரசாரம் செய்த நிக்கி ஹேலியை ஐநா தூதராக நியமித்தார் டிரம்ப்

  • 23 நவம்பர் 2016

தென் கரோலைனா ஆளுநர் நிக்கி ஹேலியை ஐக்கிய நாடுகள் அவைக்கான அடுத்த அமெரிக்க தூதராக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் டிரம்ப் தெரிவு செய்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption நிக்கி ஹேலி சிங் குடும்பம் ஒன்றில் வளர்க்கப்பட்டவர்

மக்கள் அனைவரையும் ஒற்றுமைப் படுத்துவதில் ஹேலிக்கு நன்றாக செயல்பட்ட வரலாறு இருக்கிறது என்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நிக்கி ஹேலி குடியரசு கட்சியின் ஆளுநர் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்

இவருடைய நியமனம் தான் புதிய நிர்வாகத்தில் ஒரு பெண்மணிக்கு அல்லது வெள்ளையினத்தை சேராதவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உயரிய பணிப் பொறுப்பாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆப்கானிஸ்தானின் ஹால்மண்ட் மாகாணத்தில் நிக்கி ஹேலியிகன் கணவர் மைக்கேல் (இடது) பணிபுரிந்துள்ளார்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப்பை எதிர்த்த நிக்கி ஹேலி, அமெரிக்க ஆளுநராக பணிபொறுப்பேற்றிருக்கும் இரண்டாவது ஆசிய அமெரிக்கார் ஆவார்.

ஐக்கிய நாடுகள் அவையின் தூதர் என்கிற பணிபொறுப்பானது அமைச்சரவை தகுநிலை உடையதாக இருப்பதால், குடியரசு கட்சியின் அதிபர்கள் பொதுவாக பிறருக்கு அளிக்காத ஒன்று என்று பெயரிடப்படாத வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.