யேமென்: போருக்கு நடுவே காலரா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யேமென்: போருக்கு நடுவே காலரா- 70 பேர் பலி

காலரா நோய் யேமனில் கணிசமாக பரவியுள்ளமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக ஐநா கூறியுள்ளது.

நாடெங்கிலும் சுமார் ஐயாயிரத்து ஐநூறு பேருக்கு நோய் பரவியுள்ளதாகவும், எழுபதுக்கும் அதிகமானோர் அதனால் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இருந்தாலும், நோயாளர்களின் எண்ணிக்கை எண்பதினாயிரம் வரை அதிகரிக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதில் இடம்பெறும் சில காட்சிகள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்.