இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி ஐ .நா. சபைக்கான அமெரிக்க தூதராக நியமனம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் நியமனத்தை டொனால்ட் டிரம்ப் பெறுவதில் இருந்து அவரை தடுக்க முயன்ற ஒரு அமெரிக்க மாநில ஆளுநரை, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption நிக்கி ஹாலே

டொனால்ட் டிரம்பின் தீவிர விமர்சகராக இருந்து வந்த நிக்கி ஹேலி , வெளியுறவு துறை விவகாரங்களில் குறைந்த அளவே அனுபவம் கொண்டவராக இருந்தாலும், ஐ.நா. சபைக்கு விரோதமாக அவரது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் அவரது நியமனத்தை பல ராஜிய அதிகாரிகளும் வரவேற்றுள்ளனர்.

தெற்கு கரோலினா மாநிலத்தின் ஆளுநரான நிக்கி ஹாலே இந்தியாவிலிருந்து குடியேறிய இந்திய தம்பதியரின் மகளாவார்.

மக்களை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டதில் நிக்கி ஹேலி தனது திறமையை பல முறை நிரூபித்து உள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பெட்ஸி ட வோஸ் என்ற மற்றொரு பெண்ணை அமெரிக்க அரசின் கல்வி துறை செயலாளராக டிரம்ப் நியமத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption நிக்கி ஹேலி மற்றும் பெட்ஸி ட வோஸ்

இந்த இரண்டு நியமனங்களுக்கும் அமெரிக்க செனட்டின் ஒப்புதல் பெறப்படவேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்