நைஜீரிய ராணுவம் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்

  • 24 நவம்பர் 2016

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, அமைதி வழியில் போராடிய குறைந்தது 150 ஆர்ப்பாட்டக்காரர்களை, நைஜீரிய பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Image caption நைஜீரியாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் ( கோப்புப் படம்)

நைஜீரியாவின் தென் கிழக்கில் உள்ள பயாஃ ப்ரா பகுதியை, சுதந்திர நாடாக அறிவிக்க கோரி போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பல இடங்களிலும் மிக அதிகமான பலத்தை நைஜீரிய ராணுவம் பிரயோகித்ததாக ஆம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நைஜீரிய ராணுவம், நாட்டின் பாதுகாப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு அச்சுறுத்தலாக உள்ளதாக விவரித்துள்ளனர்.

பயாஃ ப்ரா பகுதியை பகுதியை ஒரு சுதந்திர நாடாக நிறுவிட முன்னர் நடந்த முயற்சிகள், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் துவங்கிட தூண்டுதலாக அமைந்தது.

தொடர்புடைய தலைப்புகள்